தலைமுறை அன்பு
பிறந்தது முதல
பார்த்த அன்பு
விளையாடும் வயதில்
விட்டு கொடுக்காத அன்பு
விடுமுறை நாட்களில்
விடாது துரத்தும் அன்பு
கல்வி கற்றாலும்
கண்களில் மறைந்திருக்கும் அன்பு
வேலைக்குச் சென்றாலும்
வேறு ஒருவரிடமும் கிடைக்காத அன்பு
திருமணம் ஆனாலும்
திரும்பி பார்க்கும் அன்பு
பிள்ளை பெற்றாலும்
பிரியாத அன்பு
பிரிந்தது ஏனோமறைவுகளின் போது
மௌனமாய் கலைந்தது ஏனோjQuery17106244548435374765_1584956434767
காலங்கள் கடந்தாலும்
கடைசி வரை தேடும் அன்பு
மீண்டும் தலை எடுக்கும் அன்பு
தலைமுறை தலைமுறையாய்
தழைக்கட்டும் நிரந்தரமாய்
நிலவட்டும் உள்ளத்தில் ...........