ரௌத்திரம் பழகு

ரௌத்திரம் பழகு

நீ குளிர்ந்த நிலவு
நீ அழகு மலர்
நீ தாகம் தீர்க்கும் நதி
நீ இருள் அகற்றும் ஜோதி
நீ சுமை தாங்கும் பூமி
என்று பார் புகழ் பாட
மதி மயங்கி
உனக்கு நீயே அடிமை சாசனம்
எழுதும் பெண்ணே...

நீ நற்சத்திர வழிகாட்டி
நீ வைராகியத்தின் பிறப்பிடம்
நீ தூய்மையான நீரூற்று
நீ ஞான ஒளி
நீ அனற்குழம்பு
என்று உணர்ந்து ரௌத்திரம் பழகு!

~ நியதி ~

எழுதியவர் : Niyathy (16-Aug-19, 7:43 pm)
Tanglish : rowthiram pazhaku
பார்வை : 1287

மேலே