கழுவேறும் இயற்கை

'கழுவேறும் இயற்கை'

மனிதனின் அறிவு வளர்ச்சிக்கு இசைவாக ஆணும் பெண்ணும்
திருமண பந்தத்தில் தெய்வீகத்தை உணர்ந்து உறவுகொள்ளும் இன்பத்தை மறுத்து;

மேற்கத்திய நாகரீகம் தலைவிரித்தாட கொழுப்பெடுத்துப் போய்
ஆணும் பெண்ணும் சமூக குடும்ப அமைப்பினுள் புரிந்துணர்வுடன் விட்டுக்கொடுத்து
வாழ்ந்து சந்ததியை ஆரோக்கியமாக பெருக்காமல்;

புதுமை படைப்பதாக எண்ணி வீண் சபலத்துக்கு உள்ளாகி காட்டு மிராண்டித்தனமாக
வாழ்க்கையை எப்படியும் வாழலாம் என்ற முடிவுடன்
விஞ்ஞானத்தை நம்பி கடவுளுக்கு முரணான ஓரின சேர்க்கையை ஆதரிக்க;

படித்த நாகரீக மிருகங்களையல்லவா எதிர்காலம் சாட்சி படுத்த;

தீர்ப்பு எழுத தகுதியிழந்து குற்றவாளியாகி கழுவேறுகின்றது இயற்கை.

~ நியதி ~

எழுதியவர் : niyathy (14-Aug-19, 1:11 am)
பார்வை : 87

மேலே