நியதியின் கிறுக்கல்- கருத்துகள்


வணக்கம் ஐயா ,

கிறுக்கனின் கிறுக்கலில் உள்ள குறைகளை சுட்டிக்க்காட்டி படைப்பை சீர்செய்ய உதவும் தங்கள் கருத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.

கருப்பொருளை விளக்க முற்பட்டுளேன் , தயவு கூர்ந்து தவறுகளை பொறுமையுடன் பொறுத்து கொள்ளவும்.

நம்பிக்கையும் மனசாட்சி வழி உறவும்
நட்பை கற்புடன் காக்க
தோழியிடம் உள்ள குறைகளை மறந்து
நட்புறவில் நிறைவை தேடுகின்றது
இதயம் ஒரு முடிவிலித் பயணத்தில்;

**(தோழியிடம் காணும் பெருங்குறைகளும் அவள் அன்பின் முன்னால் காணாமல் போக
தோழமையெனும் முடிவிலிப் பயணத்தில் நட்பு அன்பின் சாட்சியாகி நட்புறவு இனிதே பூத்து குலுங்குகின்றது
உதாரணமாக நட்புறவில் தோழியின் பிள்ளைகளுக்கு நான் பெரியம்மாவாக்கின்றேன் )

உறவுகளின் உரிமையான கண்டிப்பையும் அவர்கள் என்னில் காணும் குறைகளையும்
மீள்பரிசீலனை செய்யும் புத்தி சொந்த பந்தங்களை தோழமையுடன் நேசிக்க
உறவில் உள்ள பெருங்குறைகளும் அவர் தம் அன்புக்கு முன்னால் காணாமல் போக
நட்புறவு அனாதையாகவில்லை அன்பு தேசத்தில்.

**( தோழமையே உறவுகளின் ஆணிவேர்
உதாரணமாக தங்கை தோழியாகின்றாள் நட்புறவில் )

தங்கள் அற்புதமான கருத்துக்கு நன்றி

வணக்கம் ஐயா! உங்கள் கருத்தை மதிக்கின்றேன்.

தனிப்பட ரீதியில் உங்களுடன் அளவளாவ என்னிடம் செய்தி இல்லை.மன்னிக்கவும்.

சிறுவன் நீங்கள் நேரத்தை பயனுள்ளதாக செலவு செய்ய வேண்டும் ஐயா .உங்கள் பாசமான தகவலுக்கு நன்றி.

வாழ்த்துக்கள்.

மன்னிக்க வேண்டும் ஐயா.

இது நியதியின் கிறுக்கல்.

நன்றி உங்கள் உயர்வான கருத்திற்கு.

வணக்கம் ஐயா,

நீண்ட ஆராய்வின் பின்னர் சிறு அறிவு என்னில் புலர்ந்துள்ளது .நான் கீழ் கண்ட முடிவுக்கு வருகின்றேன்.

Yasotha/Gopi: Soul
*Radha: Higher Level of Consciousness
*Krishna: மெய் உணர்தல் /Self Realization

ஆனால் இங்கு முதலில் உயிர் உணர்வது ராதையையா கிருஷ்ணனையா ? போதி( Enlightenment) என்பது யாதோ?பிரமனை உணர்தலா?

உங்கள் ஞான ஒளியில் உண்மையை கற்று தெளிய வேண்டும்.

நன்றி.

எந்த ஒரு உறவையும் நெய்யும் நூலக தோழமையுடன் கூடிய அன்பு இருக்கும் பட்சத்தில் அவ் உறவு ஆரோக்கியமானதாக அமையும் என்பது எனது அனுபவ பாடம்.

சீற்றம் கொள்வதும் சீறிப்பாய்வதும் உன் உயிரின் உணர்வுகளாக இருக்கட்டும் தமிழா!
புத்தியை தீட்டி பொறுமை கொண்டு சத்தியம் பேணி அகிம்சை பேசி தன்மானத் தமிழனாய் உன் பலவீனங்களை வெல்வாய் தமிழா!


வணக்கம் கவின் சாரளன் ஐயா!
காதலையும் காமத்தையும் அலசும் வயசும் அனுபவவும் என்னிடம் இல்லை .
காதல் தான் உங்கள் பார்வையில் teenage fantasy ஆகி விட்டதே!
இப்ப நாங்கள் மெய்யியல் பேசுவோமா ?அதற்காக தத்துவ புத்தகங்களை எடுத்து படி என்று கூறாதீர்கள்.

மொழியுணர்வு, தன்மானவுணர்வு , புத்துணர்வு, உள்ளுணர்வு, ஐயவுணர்வு போன்றவையை உணர்ச்சியில் இருந்து வேறுபடுத்தி நாம் நன்கு அறிவோம்.அத்துடன் நாம் தெளிய அறிவோம் மேற்கண்ட உணர்வுகளை மனித மனத்தால் கட்டுப்படுத்த முடியாது என்றும் உணர்ச்சிகளை மனித மனதால் கட்டு படுத்த முடியும் என்றும்.

PLS DO SHARE YOUR INTERESTING IDEAS ABOUT SUBTLE BODY (Consciousness,Intellect,Mind ,Ego)

மகிழ்ச்சி!

நன்றி ஐயா உங்கள் விஞ்ஞான வகுப்பிற்கு.


வணக்கம் அனிதா!
பெற்றவள் அன்பு ஆயுள் முழுக்க நிலைத்து நிற்காது.
தாய்க்கு தாயாகவும் தோள் சாய தோழனாகவும் துணைவர நிரந்திரமாக திருமண பந்தத்தில் தான் முடியும் .
மௌனராக மோகன் போல் ஒருவரை உங்கள் பெற்றார் உங்களுக்கு தெரிவு செய்ய அதை நீங்கள் மறுப்பது துரதிஷ்டம் தானே .
அதனால் தயவு செய்து பெற்றோர் தெரிவு செய்பவரை வாழ்வின் நாயகனாக்க பரிசீலனை செய்யுங்கள் .
இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!

நன்றி ஐயா உங்கள் கருத்திற்கும் ஆசிக்கும் 🙏🏾

நன்றி ஐயா .

உங்கள் கருத்தின் ஆழம் புரிகின்றது.

ஆனால் நான் ஒரு bipolar butterfly!

என் 'கற்பனை நட்புறவாம்' கண்ணன் என்று என் உற்றாரும் சுற்றாரும் உறுதிப்படுத்த
'இருந்துட்டு போகட்டுமே' என்று நான் என் கற்பனையை தொடர;
என் இதயம் கண்ணன் இசைக்கும் புல்லாங்குழலாக
தெய்வீக இசையில் உயிரின் உள்முகப் பயணம் ;
கண்ணன் அழகு கிரீடம் மயில் இறகை
உரிமையுடன் பறித்து
புத்தியில் ஞானக்கண்ணாக்க
பரவசத்தில் உயிரின் புனித தேடல் !
#பித்தனின்பிதட்டல்கள்

நான் பேசுவது மதம் அல்ல ஆன்மீகம் என்பது என் நம்பிக்கை.
நான் இங்கு எந்த மதங்களையும் இழுக்கவில்லை.அதற்க்கு என்னிடம் அறிவும் இல்லை தகுதியும் இல்லை.
என் கற்பனைக்கு சுவைசேர்க்க நான் அவ்வப்போது சாயி கிருஷ்ணாவையும் , புத்தரையும் , காளியையும் துணைக்கு அழைப்பதுண்டு .
I am not religious ; am only spiritual.
'என் சிலுவையை (மனச் சுமையை )சுமக்கின்றான் என் கண்ணன் உரிமையுடன் ' என்று மட்டுமே குறிப்பிட்டுளேன் என்று தாழ்மையுடன் தெரிவிக்கின்றேன்.

மகிழ்ச்சி .

ஐயா , தயவு செய்து சிறு கலக்கமும் வேண்டாம் - பெருமையடையுங்கள்!
உங்கள் காதல் உணர்வுகளுக்கு எழுத்து வலைத்தள வாசக உறவுகள் சாட்சி ஐயா!
இத்தனை இதயங்களுக்கும் உங்கள் இதய தேவதையை பிரதிபலித்துள்ள உங்கள் காதல் கவிதைகளை படைத்த நீங்கள் எப்பிடி காதலிடம் தோற்றவர் ?
அன்னை அவர் அருகில் இல்லாமல் போனால் என்ன ; அவர் மூச்சு என்றும் உயிரில் அல்லவா கலந்திருக்கின்றது!
உங்கள் நிலையான உயிரில் கலந்த அன்னையின் - காதலின் பசுமையான நினைவுகளில் மகிழ்ந்து இன்று போல் என்றும் நிம்மதியாக வாழுங்கள், கவி படையுங்கள் , ஞானத்தை பகிருங்கள்!
என் கருத்தில் தவறு இருப்பின் சிறியவளை மன்னிக்கவும்.
நன்றி ஐயா.

உணர்வுகள்: ஒரு நிகழ்வு, முடிந்தபின் உணர்வு ரீதியாகத் தோன்றும் நிலைமையின் அகநிலை அனுபவம். (Wikipedia )

Thanks ever so much Sir for your precious time to translate this respected knowledge the
eternal truth.Very hard vocabulary to digest in my brain.Will try to absorb the essence at its core.Thanks again.

நியதி கோபமாய் உள்ளபோது தமிழ் பேச மாட்டாள் .மன்னிக்கவும்.

( I personally do not have any trust in the ppl who go to the extreme level called divorce and break their (first)marriage vows.If one cannot understand his (first) marital partner how can he value his next ? There is no guarantee you will be understood and loved by your second bed more.So young son/daughter , please have confidence in your first marriage - most of all on your self and forgive your self ,love your self and thrive.When you act this way only you will be able forgive and love the other with no limits.
I know divorce - it's everyone's personal choice , but remember in every marriage there will be challenges , have to face it , try to give more than take , try to understand the partner than self pitying , try to live for the other than being selfish , it's a companionship not a business.)

நன்றி ஐயா! நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்.

முகத்தில் அழுக்கு ,சாடுவதோ முகம் பார்க்கும் கண்ணாடியை ?
"யார் மனிதன்?"என்பதை திருத்தி "நான் மனிதனா?" என்று வினாவி
உங்களுடன் இணைத்து விடை தேடுகின்றேன் நான்.

வாழ்க்கை மீது உள்ள அதீத பற்றினாலும் , வாழ்க்கையின் நிற்சயமில்லா தன்மையினாலும்,வாழ்க்கையில் பாதுகாப்பு இன்மையாலும் ஏற்படும் பயத்தினால் தன்னுள் குழப்பமான குணாதிசயங்களை வளர்க்கின்றான் மனிதன்.என்று தனது உள்ளுணர்வை பின்பற்றி விருப்பு வெறுப்பைக் கடந்து தெளிவான மனதுடன் வாழ்க்கையை அதன் வழியில் முழுமனதுடன் ஏற்று அவனுள் உறைந்திருக்கும் பயத்துடன் சமாதான உடன்படிக்கை கைச்சாத்திடுகின்றானோ அன்று இதுவரை குரங்காய் இருந்தவன் தன்னுள் மனிதனை உணர்கின்றான்.

தன்னை தன் வாழ்வை முழுமையாக நேசித்து வாழும் மனிதன் நிட்சயமாக சகல எதிர்மறை சக்திகளையும் மனதார ஏற்று தன்னால் இயன்றவரை நேர்மறை எண்ணத்தால் நட்புறவு பேணி மனிதனாக வாழ முயற்சிக்கின்றான்.

சிந்தனைக்கு விருந்தாக அமைந்த உங்கள் வினாவிற்கு நன்றி.


நியதியின் கிறுக்கல் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.comபுதிதாக இணைந்தவர்

மேலே