காதல்

பலநாள் முயன்று எழுதும் கவிதை வரிகள்
படிப்போரின்றி வீணே தாளில் ஒன்றிப்போக
அப்போதுதான் அந்த வினாடியில் கிறுக்கிய
அர்த்தமில்லா காதல் பிதற்றல்கள் அதை
படித்து இன்புற்று ஒரே நாளில் கோடி கோடி
ரசிகர்களை உலகின் பலகோடியிலிருந்து சேர்க்கும்
காதலிடம் நான் தோற்றுப்போனேன் இந்த' காதல்'
என்ன என்று புரியாமலேயே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jun-19, 4:41 pm)
Tanglish : kaadhal
பார்வை : 322

மேலே