வியந்துபோய் நின்றுவிட்டேன்
முழு வெண்ணிலவை பார்த்தேன்
களங்கமில்லா அவள் அழகில்
அப்படியே நின்றுவிட்டேன்
குட்டி குட்டி விரல்கள்
குண்டு குண்டு விழிகள்
விழித்து விழித்து பார்த்தாள்
வியந்துபோய் நின்றுவிட்டேன்
பெண்பிள்ளை பெற்றுவிட்டால்
மறுத்தாய் கிடைத்திடுவாள்
வேண்டாதா தெய்வமில்லை
பெண்பிள்ளை பிறப்பதற்கு
பிறந்துவிட்டாள் ஒளிச்சுடராய்
எம் தங்கையவள் தோற்றத்திலே
பொக்கிஷமாய் கிடைத்தவளை
பொத்தி பொத்தி பாதுக்காக்க
கடவுளவன் துணை நிற்பான்.
இவள்
கீதாவின் மகள்