வானவில்

வானவில் 🌹

ஊதா பூ சூடி வந்த
தேவதையே
மங்கலகரமாக முகத்தில் மஞ்சள் பூசி வந்த மகாராணியே
நீல நிற வசீகர கண்கள் உடைய வஞ்சி கொடியே
கரு நீல மயில் போல்
ஆனந்தமாக தோகை விரித்து ஆடும் நாட்டிய பேரொளியே
ஆரஞ்சு சுளை உதடு சிவப்பு நிற கொஞ்சும் இதழ் அழகியே
சின்ன இடை
சிங்கார நடை பயிலும்
பைங்கிளியே
பச்சை தாவணி உடுத்திய பாவை நீ
பாங்காய் பவனி வரும் பேரழகியே
வா என்னை சிறை எடு
வாலிபம் முடியும் முன்
காதலில் மூழ்குவோம்
நல்ல முத்தெடுப்போம்.
- பாலு.

எழுதியவர் : பாலு (11-Jun-19, 3:50 pm)
சேர்த்தது : balu
Tanglish : vaanavil
பார்வை : 201

மேலே