மாயக்கண்ணன்
நீலவண்ணனே, கண்ணா, என் குழந்தாய்,
நீ உன் சிறுகைகளால் மண்ணெடுத்து உண்டதை
நான் கண்டு ஓடோடிவந்தேனடா செல்லப்பிள்ளாய்,
என்று கூறி பதறிய யசோதை கண்ணனை
மடியிலிட்டு வாய் திறவாய் குழந்தாய்
வாயில் அடக்கிய மண்ணைத் துப்பிவிடு தின்றுவிடாதே
என்று கெஞ்சிட, மாயன் அவன் சிரித்தான்.............
வாய் திறந்தான் , அங்கு அவள் மண்ணைக் காணவில்லை,
மாறாய் இம்மண்ணைக் கண்டாள், விண்ணைக் கண்டாள்,
சூரிய, சந்திரரை , தாரகைகளை இத்தனை ஏன்
தன்னையும் அல்லவா அங்கு கண்டாள் கண்டவள்
மயங்கிட மாயக்கண்ணன் கைகளால் அன்னையை அணைக்க,
மயக்கம் நீங்க யசோதை தன பிள்ளை யார் என்பதை
உணர்ந்துகொண்டாள், அப்பப்பா என்ன பாக்கியம்
செய்தேனடா நான் உன்னை என் மகனாய் பெற்றிட,
பெற்று உனக்கு முலைப்பால் ஊட்டி வளர்த்தேனே
நாரணனே நான்முகன் தந்தையே எனக்கு மகனாய்
வந்து தாய்மைக்கே தனிப்பெருமை தந்திட்டாய்
இனி என்றும் நீ எனக்கு மகனே நான் உனக்கு தாய்*
(* உயிர் -யசோதை, கண்ணன்-மெய் உணர்தல்)