பெண்ணே பெண்ணை அறிவாயோ

பெண்ணே பெண்ணை அறிவாயோ


ஒரு கைப்பிடி பாசமும்
இரு கைப்பிடி தன்னம்பிக்கையும்
ஊட்டி வளர்த்த பெண் குழந்தை
இன்று;
அவளது உணர்வுகளுக்கு பாதுகாவலனாகும்
வாழ்வின் நாயகனான
அவளது விலைமதிப்பற்ற பொக்கிஷத்தை
கைபிடிக்க விலைபேசப்பட மூல காரணம் யார்?

யார்?

மாதவம் செய்த மாந்தரே!

தன்னம்பிக்கையில் உறுதியாகவும்
பட்டம் பல கற்று பதவி பல வகித்தாலும்
நாட்டுக்கே மகாராணியானாலும்
குடிசையின் தேவதையானாலும்
கழுத்தில் மூன்று முடிச்சு விழ முதல்
பெண்ணை பெற்றவரின் ஆயுளை குறைப்பது
சீதனச் சேமிப்பு திட்டம் ;

மணமான பெண்ணிற்கு புகுந்த வீட்டில்
கௌரவத்தை சம்பாதித்து தரும் வரதட்சணை
பிறந்த வீட்டின் இரத்தமும் வியர்வையுமாகிய ஆயுள் சேமிப்பாக
சீருடன் சிறப்பாக கரைசேருகின்ற மாந்தரின்
ஜதார்த்தை மாற்ற முடியுமா?

மென்று முழுங்க வேண்டியது பெண்ணின் விதி!

இது நவ நாகரிக பெண்ணாலும் மாற்ற இயலாத கசப்பான உண்மை.

போலி கௌவுரத்துக்காக வாழும் வாழ்க்கை மாமியாராகவும் மருமகளாகவும் உள்ள பெண்ணின் புத்தியில் இருந்து மறையும் பொழுதே,
வரதட்சணை கொடுத்தும் வாங்கியும் கௌரவத்தை தக்க வைக்கும் தமிழச்சியின் விதியை சிறு மதியால் வெல்ல முடியும்.

~ நியதி ~

எழுதியவர் : நியதி (15-Aug-19, 4:11 am)
பார்வை : 282

சிறந்த கட்டுரைகள்

மேலே