இவர்கள் கண்ணீரும் காணமல் போய்யுள்ளது

இவர்கள் கண்ணீரும் காணமல் போய்யுள்ளது.
சென்நீருக்கள் நின்று புயல் அடித்த தேசத்தின்

புத்திரர்களையும்,தெய்வங்களையும் சுமந்து
பெற்ற தோழமைகள் தொலைத்த வித்துக்களை
இன்றும் தேடுகின்றார்கள் தசாப்தம் ஒன்று கடந்து

விடைதெரியாத புதிராக துப்பக்கி முனைக்குள் முடங்கிபோயுள்ளார்கள்.
காணாமல் போனவர்கள் இன்றும் காணாமல் ஆக்கப்பட்டார்கள்.

பல ஆயிரம் வித்துக்களை,பல ஆயிரம் இளம் சிட்டுக்களை
கண்முன்னே கச்சாமி பொடியளிடம் கொடுத்துவிட்டு.
சரணம் போடுகின்றார்கள் இன்றும்.

எச்சாமி வந்து காப்பாற்றும் என கதறுகின்றார்கள்.
இவர்கள் குரல்களை கேட்க யாரும் இல்லையா
என்ற ஏக்கத்தவிப்பில் இன்றும் தொடர்கிறது இவர்கள் போராட்ட பயணம்.

இவர்களின் கண்ணீர் காணிக்கைகள் இன்றும் காணாமல் போகின்றது.

எழுதியவர் : Anthanan (20-Jun-19, 8:12 pm)
சேர்த்தது : அந்தணன்
பார்வை : 302

மேலே