மனிதரில் உயர்ந்தோன், தாழ்ந்தோன்

மதியால் மனதால் உள்ளதால் மற்றும்
செய்யும் செயல்களால் உயர்ந்து
தெய்வமாகின்றான் மனிதன்- அவனே
மதியால் மனதால் உள்ளதால் செய்யும்
செயல்களால் சீர்கேடாய் மிருகமாவதும்,
மனிதனே ……………..இப்படி ஒருவன்
உயர்ந்தவனாய் மற்றோருவன் தாழ்ந்தவனாய்
உருவாகுவது எப்படி …. வளர்ப்பில், பழகும் விதத்தில்
ஒழுக்கத்தில்…..'ஒழுக்கம் விழுப்பம் தரலான்
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும்' வள்ளுவர் வாக்கு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (20-Jun-19, 9:51 pm)
பார்வை : 86

மேலே