வழுக்கை

வழுக்கை

அன்பு நடமாடும் கண்களைக் கொண்ட அவள் சாலை ஓர இளநீர் கடைக்கு சென்றாள்.

இளநீர் ஒன்று வெட்டிக் கொடு என்றாள் .

கடைக்காரன் தண்ணிய வேணுமா? வழுக்கையா வேணுமா னு கேட்டான்.

வழுக்கையா ஒண்ணு வெட்டு என்றாள் .

அவன் சிரித்துக் கொண்டே இளநீரை வெட்டினான்.

வழுக்கையை கேட்டதற்கு அவன் ஏன் சிரித்தான் னு அவளுக்கு புரியல............

வெடிக்க கொடுத்ததும் வாங்கி கொண்டாள்.

'ஸ்ட் ரா ' கொடு என்றாள்.

கொடுத்தான்.

வாங்கிப் போட்டு உறிஞ்சினாள் ...

இளநீர் காலியானதும் கடைக்காரனிடம் கொடுத்தாள்.

கடைக்காரன் வாங்கி அந்த இளநீர்க் காயை இரண்டாக வெட்டினான்.

உள்ளே வழுக்கை லேசாக இருந்தது.

இளநீர் காயின் அடிப்பகுதியை வெட்டி அதை ஒரு 'ஸ்பூன்' போல் எடுத்து வழுக்கையை ஒரு பக்கக் காயில் சேர்த்துக் கொடுத்தான்.

வாங்கி சுவைத்தாள்.

எவ்வளவு என்று கேட்டாள்.

கடைக்காரன் இருப்பத்தியஞ்சு ரூபாய் என்றான்.

கைப்பையில் இருந்து எடுத்துக் கொடுத்தாள்.

கொடுத்ததும் அவள் ....ஏன் வழுக்கை யா ஒரு இளநீர் வெட்டு னு சொன்னதும் சிரித்தாய் ? என்று கேட்டாள்.

அதெல்லாம் எதுக்குமா...சும்மா சிரித்தேன் என்றான் ..

பரவா இல்லை சொல் என்றாள் ..

அவன் சொன்னான் ...

வாழ்க்கை ல இளநீர் மட்டும் வழுக்கை யா இருக்கனும் னு கேக்கறிங்க ....

வரவன் தல வழுக்கையாய் இருந்தா கட்டிக்க மாட்டேன் னு சொல்றிங்க.. அத நினச்சேன் சிரித்தேன் என்றான்

யாருக்கு எது பிடிக்குமோ அதை அவரவர்கள் இந்த உலகத்தில் தேர்ந்து எடுத்துக் கொள்ளலாம்...

எனக்கு வழுக்கை சுவைப்பதற்கு ...
வாழ்க்கை வாழ்வதற்கு என்று பதில் உரைத்தபடி ...

அங்கு வந்த பேருந்தில் அவள் ஏறிச் சென்றாள்

எழுதியவர் : மா. அருள்நம்பி (15-Jun-19, 5:45 pm)
சேர்த்தது : மா. அருள்நம்பி
Tanglish : Vazhukkai
பார்வை : 543

மேலே