உச்சுவாலா
பாட்டிம்மா, நம்ம ஊரிலிருந்து வேற ஊருக்குப் போகுனும்னாக்கூட மூணு மைலு நடந்து போகணும். இந்தப் பட்டிக்காட்டுல இருந்துட்டு நம்ம எட்டுப்பட்டி கிராமத்தில பொறக்கற கொழந்தைகளுக்கு எல்லாம் இந்திப் பேருங்களத் தேர்ந்தெடுத்துக் குடுக்கிறதில பெரிய ஞானி ஆகிட்டீங்க.
@@@@@
ஏன்டப்பா, உனக்கு பொறாமையா இருக்குதா. இந்திப் பேரு எங்கிட்ட கேக்க வாரத்துக்கு நாலு பேராவது என்னைத் தேடி வர்றாங்க. அது உனக்குப் பொறுக்கலையா.
@@@@@
எனக்கு உங்கள நெனச்சாபா பெருமையா இருக்குதுங்க பாட்டிம்மா.
@@@@@
சரி. உனக்கு என்னவேணும் இப்ப?
@@@@
மதுரையில இருக்கிற என்னோட நண்பன் நல்லசாமி மனைவிக்கு அடுத்த மாசம் கொழந்தை பொறக்கப் போகுதாம். ஆண் கொழந்தை பெண் கொழந்தை எது பொறந்தாலும் ரண்டுக்கும் பொருந்தர மாதிரி பேராக் கேக்கறான்.
@@@@@
டேய் கண்ணுச்சாமி, இந்த டிவி பொட்டி இருக்கிறதால இப்ப நான் இந்தில சரளமாப் பேசற அளவுக்குக் கத்துட்டேன். தனியார் பள்ளி இந்தி ஆசிரியர் தமிழ்மணி நம்ம வீட்டுக்கு வந்தாக்கூட அவருகூட இந்திலதான் பேசறேன். அவுருகூட இந்தில பேசத் தடுமாறறாரு.
@@@@
சரி. என் நண்பன் கேட்ட விசயத்துக்கு வாங்க.
@@@#
ஆண் கொழந்தையோ பெண் கொழந்தையோ. எது பொறந்தாலும் பொருத்தமான பேரு 'உஜ்வாலா'ன்னு வைக்கச் சொல்லுடா. நம்ம சனங்க அந்தப் பேரை 'உச்சுவாலா'ன்னுதான் உச்சரிப்பாங்க. இந்திப் பேரை எப்படி உச்சரிச்சா என்ன? அதுக்கு என்ன அர்த்தம் இருந்தா என்ன? சனங்க அதப்பத்தியெல்லாம் கவலைப்படறதில்ல.
@@@@@
ரொம்ப நன்றிங்க பாட்டிம்மா பெயர்ஞானி. உஜ்வாலா. அருமையான பேரு.
■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆■◆◆◆◆◆◆
Ujwala = bright, splendorous.