கடவுள் உண்டா இல்லையா

கடவுள் -நம்மைக்
கடந்தும் -நமக்கு
உள்ளேயும் இருப்பவர்.

கட + உள் = கடவுள் ...
ஆக- இச்சொல்லாய்
கடவுள் இருக்கிறார்...

நமக்கு உள்ளேயும் இருக்கிறார்
நமக்கு வெளியேயும் இருக்கிறார்..

மின்சாரத்தை
கம்பி வழியாக செலுத்தலாம்
விளக்கின் மூலமாக வெளிச்சமாகப் பார்க்கலாம் ...

தொட்டுப்பார்த்தால்
"ஷாக் அடிக்கும்" ...

வெளியே கடவுளை பார்ப்பதென்பது
விளக்கின் வெளிச்சம் பார்ப்பது போல் ...

தொட்டுப்பார்ப்பதென்பது -உள்ளே
கம்பி வழியாக செல்லும் மின்சாரத்தை
தொட்டுப்பார்ப்பதுபோல் ..

நீங்கள் கடவுளை
எப்படி பார்க்க விரும்புகிறீர்கள்?
உள்ளேயே? வெளியேயா!

எழுதியவர் : மா. அருள்நம்பி (12-Nov-17, 1:30 pm)
பார்வை : 144

மேலே