எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மகளிர் தின வாழ்த்து….( புதுக்கவிதை) - மா.அருள்நம்பி --------------------------------------------------------------------------------------------------------------------------------------...

                                                                            மகளிர் தின வாழ்த்து….( புதுக்கவிதை) -                                                                                                                                           மா.அருள்நம்பி

--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 கல்வியிலும்  கேள்வியிலும்  
 காலமறியும்   கணக்கிலும் 
 பல்நோக்குச் சிந்தனையிலும்
 மெல்லினமே  நுழைந்து விட்டாய்  
மேன்மைகள்  பெற்றுவிட்டாய்!   

 பொன்னிலும் பொருளிலும் 
 போகத்திலும் யோகத்திலும் 
 விண்ணிலும்  மண்ணிலும் 
 விவேகத்தைக் காட்டிவிட்டாய்
 வீரத்தை நாட்டிவிட்டாய்!   

 எண்ணற்கரிய  சாதனைகள் 
 எண்ணியெண்ணிச்   செய்தே 
 மண்ணுலகோர் புகழ்ந்திட 
 மதிப்பைப் பெற்றுவிட்டாய் 
 மாதர்குலத் திலகமாகிவிட்டாய்!   

 பெண்ணே! உன்னையன்றி 
 பேரண்டங்கள் சுழல்வதிலை.. 
 கண்ணே உன்னையன்றி 
 கடவுளும் தோன்றுவதில்லை…. 
 என்னே உன்சக்தி!  என்னே உன்சக்தி!   

பெண்ணுருபாகமாய்ப் 
பேரின்பம் காட்டியவளே! 
கண்ணுருமணிபோல் 
காண்கின்றேன் உன்னையான்…  
மாதர்குலத் திலகங்களே! மங்கையர்களே!
 மண்ணுலகு உள்ளவரை வாழ்க! வாழ்கவே!      

நாள் : 8-Mar-18, 8:21 pm

மேலே