மா. அருள்நம்பி- கருத்துகள்

2. செந்தமிழில் பாடு மனமே!

மலராடும் கூந்தலை
மலைக்காற்று தாலாட்ட
மங்கையவள் நாடி வருவாள்
மனங்குளிர மார்போடு
மார்புறத் தழுவியே
மலரிதழில் முத்தம் தருவாள்

பலராடும் நாட்டியம்
பார்த்தால் எனக்குச் சிரிப்பு
பொங்கி வருகிறது என்பாள்
பாவைதான் ஆடினால்
அந்தப் பரமனும் வந்து
தன்னுடன் ஆடுவான் என்பாள்

சிலராடும் ஆட்டமெலாம்
“சில்லரைக்குத்தான்” எனக்கூறி
செவ்விதழ் மலர்ந்திடச் சிரிப்பாள்
சிந்தையில் அவளழகு
வந்து விளையாடிட
செந்தமிழில் பாடு மனமே!




நிலையற்ற உலகத்தில்
நிலையானது காதலென
நெஞ்சம் உருகிடப் பேசிடுவாள்
நிலையான காதலை
உன்மேல் வைத்தேனென்று
நீண்டதொரு மூச்சிழுத்து விடுவாள்


தலையற்ற மனிதர்கள்
தலைவியின் அழகைக்காண
தவமாய் தவமிருக்க வேண்டும்
தலையுள்ள மனிதர்கள்
தலைவியின் அழகைப்பாட
தனித்தமிழ் கற்றிருக்க வேண்டும்

சிலையற்ற கருங்கல்லும்
அவளழககைப் பெறுவதற்கு
சிற்பியிடம் கண்ணீர் சிந்தும்
சிந்தையில் அவளழகு
வந்து விளையாடிட
செந்தமிழில் பாடு மனமே!
-மா.அருள்நம்பி.





நற்றமிழ் = நன்மை + தமிழ்.
இலக்கண முறைப்படி இவ்வாறுதான் பிரித்து எழுத வேண்டும். ஏனெனில் நற்றமிழ் என்பது பண்புத்
தொகைச்சொல். தமிழ் மொழி, ' நல்ல' என்னும் பண்பை பெற்ற தமிழ் சொல்லாகும்.ஆகவே இப்பண்புச் சொல், 'மை' விகுதி பெற்று வரும் என்பது இலக்கண விதியாகும்.
செந்தாமரை - வண்ணப் பண்புத் தொகை ஆகவே செம்மை + தாமரை என்று பிரியும்.
வட்ட நிலா - வடிவப் பண்புத் தொகை - வட்டமாகிய நிலா - எனவே வட்டம் + நிலா என்று பிரிப்பர்.
முத்தமிழ் - அளவுப் பண்புத் தொகை - மூன்று + தமிழ்
இன்சொல் - சுவைப் பண்புத் தொகை - இனிமை + சொல்
இவ்வாறு தொகை பெற்று வரும் சொல்லை மை விகுதி கொண்டு பிரித்து எழுதுவர்.
மேற் கூறப்பட்ட வண்ணப்பண்பு, வடிவப் பண்பு, அளவுப் பண்பு, சுவைப்பண்பு ஆகிய உதாரணச்சொற்களில் நற்றமிழ் என்னும் சொல் தமிழின்(நல்ல என்னும்) குணப்பண்பை குறிப்பதால் நம்மை + தமிழ் என்று பிரித்து எழுதுவர். அதே சமயத்தில் ..... தமிழ்ச் சொற்களை இடத்திற்கு ஏற்றார் போல் பொருள் கொள்வது மரபு. அவ்வகையில் நற்றமிழ் என்னும் சொல்லில், 'தமிழ்' என்னும் சொல்லை மொழியாகக் கருதும்படி வாக்கியம் எழுதப்பட்டு இருந்த்தால் நன்மை + தமிழ் என்றும், நற்றமிழ் என்னும் சொல்லில் தமிழ் என்னும் சொல் ஒரு வார்த்தையாகக் கையாளப்பட்டிருந்த்த்தால் நல்ல + தமிழ் என்றும் பிரித்து எழுதுவர்.

திராவிடம் என்னும் சொல் - திரிமிளம், திரிமிழ், தமிள் என்றெல்லாம் திரிபு பெற்று மருவி இறுதியில் தமிழ் என்றானதாகக் கூறுகிறார்கள்.

'தவறு' என்ற சொல்லுக்குப் பதிலாகத் தாங்கள் கூறியது போல் 'இசைவில்லை' என்றே பயன்படுதி இருக்கலாம். என்னுடைய தவறைத் திருத்தியமைக்கு நன்றி.

தலையானது என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில், எப்பொருள் யார் யார் வாய்க்கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு. அவ்வகையில் வள்ளுவர் கல்விதான் தலையானது என்று சொல்லவில்லை . 'தலை' என்று முடியும் குறட்பாக்களே தலையானதாகும். உதாரணமாக : செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை . இலக்கணத்துக்கு உட்பட்டு இயற்றப்பட்ட குறட்பாக்கள் எல்லாம் தலையானது ஆகிவிடாது. ஒரு குறளுக்கு உரிய சிறப்பான பொருளோ அல்லது மிகத்துல்லியமாக இலக்கணம் கொண்டதாலோ அதைத்தான் வள்ளுவர் தலையானதாகக் கருதுகிறார் என்று நாம் கற்பனை செய்து கொள்வதும் தவறு . 'கற்க கசடற' என்னும் குறளில் துணைக்காலே இல்லை. ஆதலால் யாராய் இருந்தாலும் கல்வி கற்று விட்டால் போதும். அவர்களுக்குத் துணை யாரும்தேவை இல்லை என்றும்.... வயதான காலத்திலும் கூட ஊன்றுகோலாகப் பயன்படும் துணைக்கால் தேவை இல்லை என்றும் பொருள் கொள்ளலாமா? மேலும் யாதானு நாடாமால் ..என்னும் இக்குறளை ஒருவன் சாகும் வரை ஏன் கல்வி கல்வி கற்காமல் இருக்கின்றானோ ! என்று வள்ளுவர் ஆதங்கத்தோடும் , மனிதனை ஏளனத்தோடும் நோக்கி இயற்றி இருப்பதாக எனக்குத்தோன்றுகிறது. ஆகவே இக்குறளில் திருவள்ளுவர் கல்விதான் தலையானது என்று சொல்வதாக என்னுடைய புலனறிவிற்கு எட்டவில்லை. . .


மா. அருள்நம்பி கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே