நிலா சோறு
இரவின் குளுமை
இதமாய் இனிக்கும் நேரம்!
ஓராயிரம் கதை பேசி
ஓட்டம் சிறிதுமாய்
அன்னை மடியெனும்
அரியணையில் பெரிதுமாய்
அமர்ந்து
நிலவிடம் விலைபேசி
வின்மீனிடம் பழிப்பு காட்டி
நிலத்திற்கு சிறிதூட்டி
செப்பிதழ் பிரித்து
தானும் உண்டு!
அன்னம் மீதம் இருக்கவே,
துயில் கொள்ள தொடங்கியதே!
அம் அழகிய மொட்டு!