மலரும் கதிரவனும்
இதழ் விரித்து மலர்ந்த மலரின் மணம் மனதை கட்டி இழுக்க
அதன் வண்ணத்தின் வனப்போ சொக்க வைக்க , அந்த மணத்திற்கும் வனப்பிற்கும் நான் மயங்கவில்லை என பொயுரைத்த கதிரவன், தினமும் அந்த மலருக்காய் அதிகாலையிலே வருகிறான் ஏனோ?
காலையில் கதிரவனை கண்டு இதழ் விரித்தது!மாலையில் நிலவை கண்டு தலை குனிந்தது ஏனோ?
ஒருவேலை பிரிவுத் துயரால் தானோ?
அதனாலே கதிரவன் மலரவள் மலர அதிகாலையிலே வருகிறானோ?