மனிதன்- இயற்கை

வான் பொய்த்து யூரியா தின்று தின்று
மண்ணும் நஞ்சாகி பாழாய்ப்போக,
போதாக்குறைக்கு விளைச்சலிலுள்ள
நன்செய்நிலங்களையும் அழித்து அங்கு
அதன்மேல் தேசிய நெடுஞ்சாலை அமைக்க,
அரசாங்கம், இன்னும் நகர்புறத்தில் இடம்
போதவில்லையென்று நகரம் சுற்றிய
கிராமத்து பயிர் நிலங்கள் காணாமல் போய்,
அங்கு மாட மாளிகைகள் வந்து நகரம்
விரிவடைய….. , ஆனாலும் வெகு தொலைவில் இல்லை
அன்று பயிர் செய்ய நிலம் இல்லாமல் போக,
உண்ணுவதற்கு நாம் எல்லாம் இருந்தும் உணவு
இல்லாமல் பற்றாக்குறையால் தவித்து நிற்க
இதில் மற்றுமொன்று சுற்றுப்புறங்கள் பாதிப்பு
மரங்கள் செடிகள் அழிவு, பறவைகள் காணாமல்
வேறெங்கோ சென்று மறைதல் …...இப்படி இன்னும்
இயற்கையை மனிதன் அத்துமீறி தாக்கல் …

எங்கு போய்க்கொண்டிருக்கிறோம் நான்…
ஓ, ஓ, இதனால்தான் செய்வதறியாது நிலவை
நோக்கி படை எடுக்கிறோமா… அங்கு குடிபெயர்ந்து
அங்கும் ……...சொல்ல தயங்குகிறது நாக்கு
அடக்கிக்கொள்கிறேன் இத்துடன்.


ஓடும் நதி நீரின் தூய்மை ….. அது மாய்ந்து
யுகாந்திரம் ஆகிவிட்டதே… எண்ணிலடங்கா
கழிவு ரசாயனத்தை வெளிக்கொணரும் தொளிர்ச்
சாலைகள் நாளொருமேனி பொழுதுருவண்ணம்
நதிநீரில் கலந்து பயிர் நீரை, குடி நீரை
நஞ்சாக்குதே என்னென்பேன் இந்த அவலத்தை
இந்நீரால் அது பாயும் நிலமும் விஷமாகுதே !
முடிவில் இந்த மாசுடைய நதிநீர் கடலைப்போய்
சேர, கடல்நீர் மாசடைய, கடல் ஜீவனங்கள்
நஞ்சுண்டு வாடி மடிய, கடலையே மண்ணாய்
எண்ணி வயலாய் அதை எண்ணி மீனுக்கு
நீரையே உழுது அறுவடை செய்யும் மீனவன்
செய்வதறியாது விழிக்கின்றான்….
அவலம், அவலம், கொடுமை இது!

இயற்கைமீது மனிதன் நடாத்தும் அத்துமீறல்கள்
நிறுத்திக்கொள்ள மனிதா இத்துடன்
மாற்றிக்கொள்ள உன்னை , இயற்கையோடு இனைந்து
வாழ பழகிக்கொள்ள அது உன்னை நலன் பலல
நல்கி இனிதே வாழவைக்கும் வாழ்வாங்கு.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (23-Jul-19, 5:00 pm)
பார்வை : 993

மேலே