இயற்கை

நமக்கென்று பூமியைப் படைத்தது
அதில் பஞ்சபூதங்களாம் ஐந்து
ஜீவாதார ரசாயன கூறுகளும் தந்து
இயற்கையும் அன்னை நம்மைப்பேணி வளர்க்க
படைத்து, படைத்த ஒவ்வோர் அணுவிலும்
நம் கண்களுக்கு புலனாகாது தானே இருந்து
இயங்கி நம்மைப் படைத்து , காத்து, அழித்தும்
அலகிலா விளையாட்டுடையான் இறைவன்
அண்டகோளங்களில் வேறெங்கும் இந்த
அமைப்பு இதுவரை இல்லாதது வினோதமே..

இதை அறிந்து இறையை உணர்ந்து
இயற்கையுடன் ஒன்றி வாழாது
பலகோள்களைத் தேடி நாம் குடிபுகுந்திட
அவசர அவசரமாய் முனைவதேன் …
சந்திரன், செவ்வாய் , வியாழன் என்று
இவற்றைத் தேடி ……..!

பூமியைக் காத்து இயற்கையோடு
கொஞ்சி குலாவி இன்பமாய் வாழ்ந்திடலாம்
விஞானம் வளரட்டும் இல்லை என்று

சொல்லவில்லை
மெய்ஞானத்திற்கு வழி காட்ட விஞானம்
வளரட்டும்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (24-Jul-19, 12:31 pm)
Tanglish : iyarkai
பார்வை : 1061

மேலே