பிறந்த வீடு
சிறு வயது தோழியாய் என்றுமே என்னிடம் அன்பு பாராட்டும் அன்னை..
சிறு பிள்ளையாய் எப்பொழுதும் என்னிடம் சண்டையிடும் தந்தை...
இதுவரையிலும் என்னைப் போட்டுக்கொடுத்தும், எனக்காக எதையும் விட்டுக்கொடுத்தும் வாழும் தமக்கை...
நான் எப்பொழுது உறங்கினாலும், எப்பொழுது எழுந்தாலும் கேள்வி கேட்காத என் படுக்கையறை...
சாப்பிடுவதற்கு மட்டுமே எட்டிப்பார்க்கிறாள் என்று திட்டாத என் வீட்டு சமையலறை...
இதுவரையிலும் இவளைப் பார்த்ததே இல்லை என்று புலம்பாத - நான் கோலமிடாத என் வீட்டு வாசல்...
சோகத்திலும் சுகத்திலும் எனக்காக காத்திருந்த என் அன்னையின் மடி...
இனி எதுவுமே என்னுடன் இருக்கப்போவதில்லை..
நான் பிறந்தது முதலே பார்த்து வந்த என் வீடு
இனி எனக்கு பிறந்தவீடு..