மேகம் கருக்காதா பெண்ணே
மங்கையைக்கண்டு மயங்கும் மாலையில்
மதியிழந்து மறைக்காதே முகிலா
சினந்த செங்கதிரைக் கொண்டு
சூழும் உன்னைச் சுட்டெரிப்பேனே
கனா காணாதே கதிரவா
கன்னிக்குமேல் கடமையை வை
முளைத்த மோகத்திலிருந்து மீண்டுவா
மீறினால் முகிலில் மறைந்துபோவாய்
அறிவுரை அளிப்பதற்கே அலைகிறாயோ!
ஆதவன்என்னை ஆத்திரமடையச் செய்யாதே
வெண்மேகம் உன்னை வென்று
கார்முகிலாய்க் கருக்குவேனே நின்று
மங்கையின் மையலிலிருந்து மீளாமல்
கருமேகமாய் என்னைக் கருக்கினாயோ
ஓய்வில்லாமல் ஒளிதரும் நீ
ஓய்ந்துபோவாய் என்னிடமே
முழுதாய் உன்னை மறைத்து
ஓங்கியஉன் ஒளியை ஒழிப்பேனே.உன்மோகக்
கதிரிலிருந்து கன்னியைக் காப்பேனே
கதிரவனிருந்தும் காரிருள் காட்டுவேனே.