Sasikumar - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Sasikumar
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  14-Aug-2022
பார்த்தவர்கள்:  11
புள்ளி:  2

என் படைப்புகள்
Sasikumar செய்திகள்
Sasikumar - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Sep-2022 5:35 pm

மங்கையைக்கண்டு மயங்கும் மாலையில்
மதியிழந்து மறைக்காதே முகிலா
சினந்த செங்கதிரைக் கொண்டு
சூழும் உன்னைச் சுட்டெரிப்பேனே

கனா காணாதே கதிரவா
கன்னிக்குமேல் கடமையை வை
முளைத்த மோகத்திலிருந்து மீண்டுவா
மீறினால் முகிலில் மறைந்துபோவாய்

அறிவுரை அளிப்பதற்கே அலைகிறாயோ!
ஆதவன்என்னை ஆத்திரமடையச் செய்யாதே
வெண்மேகம் உன்னை வென்று
கார்முகிலாய்க் கருக்குவேனே நின்று

மங்கையின் மையலிலிருந்து மீளாமல்
கருமேகமாய் என்னைக் கருக்கினாயோ
ஓய்வில்லாமல் ஒளிதரும் நீ
ஓய்ந்துபோவாய் என்னிடமே


முழுதாய் உன்னை மறைத்து

ஓங்கியஉன் ஒளியை ஒழிப்பேனே.உன்மோகக்

கதிரிலிருந்து கன்னியைக் காப்பேனே

கதிரவனிருந்தும்

மேலும்

Sasikumar - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2022 9:46 am

பருத்தி போன்ற என்னை
கருக்கியதேன் எனக்
கதிரவனிடன் கதறிக்
கண்ணீர் விட்டது கருமேகம்

வருந்தாதே வெண்மேகமே

உன் கண்ணீராலும்
என் செங்கதிராலும்
வானவில்லால் வானத்தை
வண்ணமயமாக்க விலைந்தேன் எனக்
கருதியது கருமேகம்

மேலும்

கருத்துகள்

மேலே