உமாவெங்கட் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : உமாவெங்கட் |
இடம் | : Komarapalayam |
பிறந்த தேதி | : 03-Oct-1991 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 30-Aug-2022 |
பார்த்தவர்கள் | : 1377 |
புள்ளி | : 25 |
என் வார்த்தைகள் கூட கவிதையாகும்
அதை நீ வாசித்தால் மட்டும்..
அர்த்தமற்ற சந்தோசம்
இணைபுரியா பதற்றம்
உறக்கமில்லா சொற்பனம்
இதுவரை உணர்ந்திராத சுகம்
ஓ! இதுதான் காதலா!
உன் குறுஞ்செய்தியில் மகிழும் என்னை..,
எப்போது மகிழவைப்பாய் உன் குரல் கேட்டு...
என் தோற்றத்தில் பல மாறுதல்கள் வந்தபோதும்.,
அவர் தோற்றத்தில் எந்த மாறுதலும் இல்லை..
இருபது வருடங்கள் முடிந்தபின்பும்
என் பள்ளி ஆசிரியருக்கு...
காரணம்..,
அவர் எப்பொழுதும் சிறுபிள்ளைகளுடன் பழகுவதாலா?
இல்லை அவரைப் பார்த்ததும் சிறுபிள்ளையாய் நான் மாறுவதாலா?
என் பெண்மையை எனக்கே முழுவதாய் உணர வைத்தவன்...
எனக்குள்ளும் காதல் உணர்வை மலரச் செய்தவன்...
ஆணுக்குள்ளிருக்கும் தாய்மை உணர்வினையும் அறிய வைத்தவன்...
என் உலகமே அவன் மட்டும்தான் என அன்பினால் என்னை திணற வைத்தவன்...
அவன் மனம் வருந்தும்போது என் மடிசாயும் எந்தன் குழந்தையானவன்...