இராசு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  இராசு
இடம்:  விருதுநகர்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  29-Nov-2022
பார்த்தவர்கள்:  35
புள்ளி:  20

என்னைப் பற்றி...

கவிஞர்

என் படைப்புகள்
இராசு செய்திகள்
இராசு - இராசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Dec-2022 5:00 am

காட்டாற்று வெள்ளத்தில்
கடைசி நிமிடத்தை
கடந்து கொண்டிருப்பவருடன்
சுயபடம் எடுத்து
காணொளியாக்கியதோடு
புலனத்திலும் முகநூலிலும்
படவரிகளிலும் கீச்சகத்திலும்
பதிவிட்டு பகிர்ந்து
புகழடைதலே சிலரின்
மனிதநேயம் இன்று....

மேலும்

இராசு - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Dec-2022 12:42 pm

இயற்கையை மறந்து
செயற்கையை நாடினோம்//

இருளில் மூழ்கினோம்
ஏனென்று அறியாது//

ஆழிப்பேரலையும் ஓரிரவில்
பாடம் புகட்ட//

இனியாவது அறிவோம் இயற்கையின் மகிமையை...

மேலும்

இராசு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2022 10:25 pm

அந்தியும் சாய்ந்தது
ஆதவனும் மறைந்தது
இருளும் சூழ்ந்தது
ஈன்றெடுத்தவர்களோ நித்திரையில்
உறக்கமும் கண்ணிலில்லை
ஊணும் உண்ணவில்லை
என்னவனின் வருகையை
ஏங்கிப் பார்த்து
ஐம்புலன்களும் நொந்து
ஒற்றையடி பாதையில்
ஓரடியாய் வைத்து
ஔதும்பரத்திற்கு அடியில்
அஃதை போல் வாடினேன்
நீ வருவாய் என....

மேலும்

இராசு - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2022 5:00 am

காட்டாற்று வெள்ளத்தில்
கடைசி நிமிடத்தை
கடந்து கொண்டிருப்பவருடன்
சுயபடம் எடுத்து
காணொளியாக்கியதோடு
புலனத்திலும் முகநூலிலும்
படவரிகளிலும் கீச்சகத்திலும்
பதிவிட்டு பகிர்ந்து
புகழடைதலே சிலரின்
மனிதநேயம் இன்று....

மேலும்

இராசு - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2022 10:39 pm

தாய் கருவில் சுமக்கிறாள்
தந்தை தோளில் சுமக்கிறார்
பல இல்லங்களில்
தாயே சுமக்கிறாள்
தோளிலும் கருவிலும்

தாயே தந்தையாகவும்
அவதரிக்கிறாள்.
அப்பாவின் அன்பை
அறியாத மழலையும்

தந்தையின் பாசத்தை
பார்க்காத பாவையும்
தனக்கு ஏனிந்த
தவிப்பென்று உணரும்
தருணங்களில் தாயே
தன் உலகமென்று
தன்னிறைவு பெற்று
தரணியில் தடம்
பதித்ததோடு.....
படைத்தவனிடமே
விண்ணப்பமிடுகிறாள்..
அடுத்த யுகத்திலாவது
சும்மாடு இல்லாமல்
சுமக்கும் சுமைதாங்கியாய்
தாயையும்...
அப்பாவின் அரவணைப்போடு
அவதரிக்காத சேயையும்
படைத்துவிடாதே என்று....

மேலும்

இராசு - இராசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-Dec-2022 10:09 am

அம்மாவின்
முந்தானையில்
தொடங்குகிறது
சேமிப்பு

படிப்பிற்கும் பட்டத்திற்கும்
பல நேரங்களில் உதவியது
முந்தானை சில்லறையே

சில்லரறையில்
சிக்கனத்தைக் கற்றுக் கொண்டு
கோடி ரூபாய் சேமித்து வைத்தாலும்
முந்தானை சில்லறைக்கு ஈடாகாது

அதில் இருக்கும்
வியர்வையும் கண்ணீரும்
அவளுக்கு மட்டுமே தெரியும்

இன்றும் என்னில்
இருக்கும் சில்லறையில்
அவளின் முந்தானை வாசனையே.....

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

மேலே