மகளின் விண்ணப்பம்
தாய் கருவில் சுமக்கிறாள்
தந்தை தோளில் சுமக்கிறார்
பல இல்லங்களில்
தாயே சுமக்கிறாள்
தோளிலும் கருவிலும்
தாயே தந்தையாகவும்
அவதரிக்கிறாள்.
அப்பாவின் அன்பை
அறியாத மழலையும்
தந்தையின் பாசத்தை
பார்க்காத பாவையும்
தனக்கு ஏனிந்த
தவிப்பென்று உணரும்
தருணங்களில் தாயே
தன் உலகமென்று
தன்னிறைவு பெற்று
தரணியில் தடம்
பதித்ததோடு.....
படைத்தவனிடமே
விண்ணப்பமிடுகிறாள்..
அடுத்த யுகத்திலாவது
சும்மாடு இல்லாமல்
சுமக்கும் சுமைதாங்கியாய்
தாயையும்...
அப்பாவின் அரவணைப்போடு
அவதரிக்காத சேயையும்
படைத்துவிடாதே என்று....

