வேலனார் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : வேலனார் |
இடம் | : தமிழகம் |
பிறந்த தேதி | : 21-Apr-1982 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Sep-2018 |
பார்த்தவர்கள் | : 137 |
புள்ளி | : 10 |
ஓவியம் தீட்டுவதும் கவிதை இயற்றுவதும் பிடித்தமானவை. விருப்பமுள்ள கவிஞர்களுக்கு .. உங்கள் கவிதை பொருளுக்கேற்ற ஓவியத்தை நான் படைக்க எண்ணுகிறேன் .. ஒரு கவிஞருக்கு முதலில் இந்த முயற்சி செய்யலாம் என்றுள்ளேன் ..
இதுவரை எழுதாத கவிதை ..
இதுவரை உதிக்காத சிந்தனை ..
இதுவரை உதிராத புன்னகை ..
இதுவரை காணாத வண்ணம் ..
இதுவரை கேளாத மென்னொளி ..
இதுவரை நுகராத மணம் ..
இதுவரை பெறாத நிம்மதி ..
இதுவரை வராத இன்பக்கனா ..
நீ !
எதுவரை நீளும் வானம்
அதுவரை நீலம் போல்
சுடும் வரை நிலைக்கும் உறவு அல்
மீளாத்துயில் வந்து முத்தமிடும் வேளை வரை தொடர்கின்ற உறவன்றோ ..
நீ !
- மறைமலை வேலனார்
உன் அகந்தையின் அடிமனதில் ஓர் அகிம்சை எதற்கு
என்னை காதலெனும் கருணைக்கொலை செய்யவா??
இருவிழி தந்த
இறைவனிடம்கூட இறுமாப்பு கொள்கிறேன், உன் கடைக்கண் பார்வைக்காய்..
பஞ்சத்திற்கு மழை பனிபோல என்பார்களே --
என்
நெஞ்சமது மகிழ
சிறுபுன்னகை சிந்தமாட்டாயோ??
உனக்கென ஓர் கவிக்காக,
உலகெலாம் சுற்றினேன் ..
கிடைக்கவில்லை
களவாடியது
யார் ??
அந்த காற்றா....
இல்லை இவையாவும் என் கற்பனையா??
திடுக்கிட்டு விழித்தேன்...
பட்டாம் பூச்சிக்காரனே!!
கனவிலும் என் நினைவில் நீயே..
வீழ்ந்தப்பின்
ஈறம் பாய்ந்து
சத்துக்கொண்டு முட்டி
நீண்டு வளர்ந்தெட்டி
உயிர் பெற்றது ... விதைப்பந்து !
முகில் திரட்டி உயிர்கள் போற்றும் முத்துமழை தந்தாய்
உன் வேர்கள் பிடிங்கி வெறியாட்டமிடும் முட்டாள் மனிதன் !
மரம் வரமாக
மனிதன் மரமாக ..
- வேலனார்