நீ
இதுவரை எழுதாத கவிதை ..
இதுவரை உதிக்காத சிந்தனை ..
இதுவரை உதிராத புன்னகை ..
இதுவரை காணாத வண்ணம் ..
இதுவரை கேளாத மென்னொளி ..
இதுவரை நுகராத மணம் ..
இதுவரை பெறாத நிம்மதி ..
இதுவரை வராத இன்பக்கனா ..
நீ !
எதுவரை நீளும் வானம்
அதுவரை நீலம் போல்
சுடும் வரை நிலைக்கும் உறவு அல்
மீளாத்துயில் வந்து முத்தமிடும் வேளை வரை தொடர்கின்ற உறவன்றோ ..
நீ !
- மறைமலை வேலனார்