பட்டாம்பூச்சிக்காரன்
உன் அகந்தையின் அடிமனதில் ஓர் அகிம்சை எதற்கு
என்னை காதலெனும் கருணைக்கொலை செய்யவா??
இருவிழி தந்த
இறைவனிடம்கூட இறுமாப்பு கொள்கிறேன், உன் கடைக்கண் பார்வைக்காய்..
பஞ்சத்திற்கு மழை பனிபோல என்பார்களே --
என்
நெஞ்சமது மகிழ
சிறுபுன்னகை சிந்தமாட்டாயோ??
உனக்கென ஓர் கவிக்காக,
உலகெலாம் சுற்றினேன் ..
கிடைக்கவில்லை
களவாடியது
யார் ??
அந்த காற்றா....
இல்லை இவையாவும் என் கற்பனையா??
திடுக்கிட்டு விழித்தேன்...
பட்டாம் பூச்சிக்காரனே!!
கனவிலும் என் நினைவில் நீயே..