சிறு வெளிச்சம்
இருட்டிப்போனது
என் வழி
சிறு வெளிச்சம்
உன் விழியில் கண்டேன்
வழி நெடுக்க நீ
வேண்டும் என்றேன்
தீ பந்தம் ஒன்று
கையில் கொடுத்தாய்
வெளிச்சம் வேண்டுமா
இதோ என்றே
சொல்லிச் சென்றாய்
அந்நேரம் என் வழி வெளிச்சமானது
என் வாழ்வோ இருட்டிப் போனது
நீ அறிவாயோ நித்திலமே
என் ஆழ்மனதில் ஒளிர்விடும்
சுடர்ஒளி நீ தான் என்று...!!!