உன் பார்வை மொழியும் உன் அழகின் பெருமையும்

கார்வண்ண கூந்தலில்
வெண்மேக வண்ண மல்லிகைச்சரம் சூடி !
வண்ண புடவை நேர்த்தியாய் உடுத்தி
வருகிறாய் என்னை நோக்கி மெல்ல மெல்ல
அன்ன நடையில் அசைந்து அசைந்து !

கயல் விழிகளை அம்பு என மாற்றி
கூர் அம்பு போல பார்வை ஒன்றை
வீசுகிறாய் என்னை நோக்கி !


இதயம் தான் பாவம் என்ன செய்யும்
இடர் இன்றி உன் பார்வைகளை
இன்ப இன்னலோடு பத்திரமாய்
சேர்த்துவைத்து கொள்கிறதே !

இருக்கட்டும் இருக்கட்டும்
கவிதைக்கென வார்த்தைகளுக்கு

உன் பார்வை மொழியும்
உன் அழகின் பெருமையும்

பத்திரமாய் என்னுள் இருக்கட்டும் !

எழுதியவர் : கவிஞர் முபா (24-Jul-18, 7:39 pm)
பார்வை : 316

மேலே