என்னவள் எப்பவும் அழகு தான்,,,,,,
பெண்கள் எப்போது அழகு
கோவத்திலா இல்லை
புன்னகைக்கும்போதா !!
பட்டிமன்றத்தில்
அனல் பறந்த பேச்சுக்கள்
வார்த்தைகள் விளையாடின
இரு தரப்பிலும்
என் நினைவுகள் இப்போது
என்னவளை நோக்கி .........
கோவத்தில் ஆற்று நீரை போல
அடித்து சென்றாலும்
கலங்கள்
தெளிந்தால் அவ்வளவு அழகு
அழுகையின் போது
மழை சாரல் போல
இடையூறாகா
இருந்தாலும்
ரசிக்க தோணுதடி
சந்தோஷத்தில்
உன் புன்னகை
உலகை வென்ற திருப்தி
((எனக்கு))
என்னவள் எப்பவும் அழகு தான்,,,,,,