உன்னை நான்
அழகே பேரழகே
என் இனியவளே...
உன் கருவிழியில்
விழுந்த நான்
காதல் கடலில்
விழுந்து தவிக்கிறேனடி..
உன் ஓரப்பார்வை
கண்ட நான்
என் மொத்த
வாழ்க்கையும் தனித்து
விட்டேனடி உனக்கு.
உன்னை பார்த்த
ஓர் நொடி
என்னை நான்
நேசித்த முதல்
நொடி..
பார்வையில் மட்டும்
பட்டு தொலைந்து
சென்றவளே...
உன் பிரிவு
இந்த உலகையே
இருளாய் காட்டுகிறதடி..
உன் நிழல்
தேடி பாதங்கள்
எங்கெங்கோ போகின்றன..
கானல் நீராய்
உன் முகம்
கண்டு பூரிப்படைகின்றேனடி..
உன்னை காண
தவிமிருக்கும் இவனை
தேடி உயிரே வரமாட்டாயடி..