இயற்கை

கனகாம்பரம் டிசம்பர் மற்றும் வாடாமல்லி
வாசமில்லா அழகு மலர்கள் இவை
குணமில்லா அழகு மங்கையர்போல் ;
தடாக நீரின் மேல் உயர்ந்து பூக்கும்
தாமரை , பேரழகுப்பூ சுகம்தரும்
இன்பமணமும் இதிலுண்டு தேவரும்
விரும்பும் அற்புதப்பூ இது
பண்புமணம்பொங்கும் அழகு
கற்புக்கரசியாம் மங்கையர்போல்
வியந்தரும் இயற்கை
இயற்கையே போற்றி போற்றி போற்றி.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (23-Dec-18, 10:14 pm)
Tanglish : iyarkai
பார்வை : 899

மேலே