காதல் கண்கள்
காதல் கண்ணால்
கவிதை சொன்னால்
உன் செவ்விதழ் திறந்து
செந்தமிழில் ஓர்சொல்
சொல்வது நீ எந்நாள்?!
என்னுள் காதல் தரித்த நேரம்
கவிதை மலர்ந்தது நெஞ்சில்!
இளம் கவிதை மலர்ந்த வேளையில்
ஒரு சிந்தனை பிறந்த்து என்னுள்
சிந்தனை வளர்ந்த காலம்
பல உண்மைகள் வெளியானது
பகுத்தறிவு இருந்ததினால்
தன்னைத் தானே அறிய முயன்றேன்
என் திறமைகள் யாவும் உன்னால்
வெளியானதென்றால் அது. மிகையாகது
அன்பே இனியும் மெளனம் கொண்டால்
என் வாழ்க்கை நரகமாய் மாறும்!
யாரால் கவிஞன் ஆனேனோ
அவளால்தான் இன்று பைத்தியமானேன்!
உன்மன வீட்டின் உள்கதவுகளை
பூட்டு போட்டு பூட்டிவிட்டு
வெளியில் இருக்கும் என்னை
திறக்க நீ சொன்னால் ...
திருடனுக்கும் அது கடினம்தான்!
பெண் நெஞ்சை திறந்து வைத்து
நுழைவாயில் செவ்விதழ்தனை
மெளனத்தை வைத்து பூட்டி வைத்தால்...
காதல் நுழைவது கடினம்தான்!