ஆண்மையெனப்படுவது யாதெனில்

நிறைய படிச்சிருக்கா!
பெரிய இடத்துல
பொறுப்பான பதவியில
இருக்கா!
கை நிறைய
சம்பாரிக்கிறா!
கண்ணுக்கு
லட்சணமா வேற
இருக்கா!
அதனாலதானோ
என்னமோ
ரொம்ப திமிராம்!
யாரோடும்
பேசமாட்டாளாமே!
பெரிய குடும்பமாம்
அண்ணனுங்க
ரெண்டுபேருக்கு
ஆசை தங்கச்சியாம்!
அந்த
திமிரா இருக்கும்!
யாரயோ காதலிக்குதாமே!
ரொம்ப மோசமா இருப்பாளோ!
இப்படித்தான்
பலருக்கு அவள பத்தி
தெரிஞ்சது!
குழந்தைத்தனத்தோட
கொஞ்சும் தமிழ் பேசிகிட்டு.
முட்ட கண்ண உருட்டிகிட்டு.
செல்லமா கோபபட்டு.
திட்டுனாக்கா
அப்பாவியா மூஞ்ச வைச்சு
மூக்க உறிஞ்சி
அழுதுகிட்டு.
எல்லாத்துக்கும் ஆமாபோட்டு
அன்பால ஆள
கட்டி போடுவான்னு
சொன்னா நம்புங்க!
எத்தன தடவ
திட்டியிருப்பேன்.
என்னல்லாம் பண்ணி
வெறுப்ப கொட்டி
துரத்தியிருப்பேன்.
வெட்டி பயடி
நான்
வெலகிப்போடிண்ணு
தேளா கொட்டி
தீமேல போட்றுப்பேன்.
விட்டுட்டு போனாளா சன்டாளி!
ஆதிக்க சாதி வெறி
உருக்குலைக்குமின்னு
அறியாம இருக்காளே!
எடுத்து சொன்னா புரியும்ணு
அம்மாவ பேச விட்டா
அத்தை மாமாண்ணு
வீடுவர வந்துப்புட்டா!
வில்லங்கம் எதுக்குணு
கண்ண விட்டு கடந்தா
காலத்தோட மறப்பாண்ணு
கடல் தாண்டி போனேங்க
ஆண்டு மூணு
கடந்ததுதான் பாடு
அவ மட்டும் மாறலயே!
பணக்கார வீட்டு புள்ள
வெவரம் பத்தலயோ?
எதிர்காலம் இருட்டிடும்டி
என்கூட வந்தா!
பெரியவங்க பேச்சுகேட்டு
உனகேத்த
எவனயாச்சு கட்டிக்கண்ணு
அனுப்பி வைச்சா!
பாதகி பாடையில போவேண்ணு
படக்குண்ணு சொல்லிட்டாளே!
உன்மையாவே என்ன
உனக்கு புடிக்கலயாண்ணு
கண்கலங்க கேட்டப்போ
கதிகலங்கி போனேங்க!
அனிச்சம்பூ பேச்சுக்காரி!
மொத்த தெருவுக்கும்
அவதான் பேரழகி!
அவ குணத்துல கோபுரங்க!
சமையல் நல்லா பண்ணுவாங்க!
கார் கூட ஓட்டுவாங்க!
சேலையில பாக்கிறப்போ
மகாலக்ஷ்மி தாங்க!
தேவதைய வேணாங்க
எப்படிங்க மனசு வரும்!
சாபபட்ட பயலுக்கு
சாமி எதுக்குண்ணு
ஒதுங்க நினைச்சாலும்!
மனசு முழுக்க அவதாங்க!
வீராப்பா பேசிப்புட்டு
அவகிட்ட
மனச விட்டுட்டு
பொணமாத்தான் போறேன்னு
புரிஞ்சா தாங்கமாட்டா
செத்தாலும் என்ன
மறக்கமாட்டா!
அழுத்தக்காரிங்க
என் தேவதை!
அதாங்க
அத்தை மகள
கட்டிகிட்டு வாழப்போறேன்
போய் தொலைண்ணு
திட்டிப்புட்டேன்!
போறப்போ பார்த்தாளே
ஒரு பார்வை!
கண்ணு நீர் கட்டி
முகம் செவந்து
நில்லுண்ணு சொல்லேன்னு
பச்சை புள்ளையாட்டம்
ஏங்கி தவிச்சபடி
திரும்பி பார்த்துக்கிட்டே
போணாளே!
உசுரோட
கொண்ணுட்டியே
கொலைகாரா!
ரெண்ணுநாள காணுங்க!
என் நிலவு வரலிங்க!
பாசத்த பார்வையிலே
பாலாக்கி குளிரவைப்பா!
பாவிப்பொண்ண
பாக்கணும்ணு
தவியா தவிக்கிறேங்க!
என்ன செய்யண்ணு
சுத்தமா புரியலீங்க!
கோபுரத்து கலசத்த
குப்பை மேடு தாங்குமாங்க!
வசதியா வளர்ந்தவள
காதல்ணு வதைக்கணுமாங்க!
என்ன நெனைச்சாளோ!
கண்ணீர் வடிச்சாளோ!
ஒழுங்கா தூங்காம ஒடம்ப
கெடுத்தாளோ!
இதெல்லாம் கம்மிண்ணு
ஏதாச்சும் பண்ணி தொலைப்பாளோ!
உசுர கைல புடிச்சுக்கிட்டு
பார்த்துட்டு இருக்கேங்க!
இன்னுமொருவாட்டி
என்னதேடி அவ வந்தா
இழக்க மனசில்லீங்க!
ஒலகமே எதிர்த்தாலும்
அவ எனக்கு வேணுங்க!
கடவுள் இருந்தாக்கா
அவ
மனச மாத்திகிட்டு
மாலையோட வாழணும்
இல்லேன்னா!!
என்ன தேடி வரணும்!
இது ரெண்டுக்கும் நடுவுல
வேற சேதி வேணாங்க!!!!

எழுதியவர் : shanju (10-Jul-16, 11:01 pm)
பார்வை : 163

மேலே