சாமானியனின் நாட்குறிப்பு

காதலியின்நினைவு குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு காதலனின் நாட்குறிப்பு

கவிதைகளின் குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு கவிஞனின் நாட்குறிப்பு

மருத்துவ குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு நோயாளியின் நாட்குறிப்பு

வரவுசெலவு குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு வியாபாரியின் நாட்குறிப்பு

அனுபவங்களின் குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு போராளியின் நாட்குறிப்பு

இயற்கையின்பருவநிலை குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு விவசாயின் நாட்குறிப்பு

நாளையென்ற நம்பிக்கை குறிப்பால் நிரம்பியிருந்தது
ஒரு சாமானியனின் நாட்குறிப்பு

ஜீவா நாராயணன்
9600579929

எழுதியவர் : ஜீவா நாராயணன். (18-Jul-16, 11:19 pm)
பார்வை : 180

மேலே