நானும் அவளும்
எண்ணாத எண்ணமெல்லாம்
என்னை நீ எண்ணவைத்தாய்...
ஏனென்று கேள்வி கேட்டு
எல்லாம் உண்மைகளையும் தெரிந்து கொண்டாய்...
இருக்கும் போது இல்லையென்று -இனி
நான் எப்படி சொல்வது!
ஐயோ பாவமென்று இடம்தந்தாள்
அத்தனையும் எனதாய் ஆக்கிக்கொண்டேன்
அடக்கம் தந்தவளை
ஒரு நாளும் நான் மறவேன்...
எனது உயிராய் ஆனபின்னே
எங்ஙனம் அவளை நான் பிரிவேன்!
கடிகார முள்ளாய்...
நானும் அவளும்...