தினம் ஒரு பாட்டு இயற்கை - 23 = 166
“ஓ மஞ்ச ஆட்டோ…!
நீ எந்த ஸ்டாண்டோ…?
கொஞ்சம் நில்லு நாங்க வாறோம்
லாங்கு ரூட்டு நாங்க போறோம்
மீட்டர் மேல என்ன ரேட்டாம்.?”
வந்துருச்சி வண்டலூரூ;
வண்டிய வளச்சி வடக்கே நிறுத்து
வனவிலங்கின் தலைவனுக்கு..
வணக்கம் சொல்லித் திரும்பி வாறோம் !
தேசத்தின் தேசிய விலங்கே
உன் தலையெழுத்து இந்த ஜு-விலா ?
எதையும் நீ எடுத்துக்கொள்
எங்களைப்போல் ஜோவியலா !
வனவிலங்கின் தலைவனே
வாழ்க்கை வெறுத்தா வண்டலூரூ வந்தாய்?
பொழுதுப் போக்க மனிதனுக்கு
காணாப் பொருளாய் காட்சி தந்தாய் !
சிறுத்தையே உன் சீற்றம்
உன்னை கூட்டில் அடைத்ததால் ஏமாற்றம்
உன்னைக்கொல்ல ஒரு கூட்டம்
ஊரெங்கும் சுற்றுதே நரிகளாட்டம் !
புள்ளி மானே நீ துள்ளும் அழகு
கன்னிப்பெண்ணின் புருவ அழகு
நல்ல மனதை கொள்ளைக்கொள்ளும்
வெள்ளைக்கார உருவ அழகு !
ஆனைமீது ஊர்கோலம் போறோம்
அதன் உருவ நிறம் கார்மேகமாகும்
மதம் பிடிக்கும்வரை மனிதனை மதிக்கும்
மதம் பிடிதால் மனிதனை மிதிக்கும் !
பட்டுச் சரிகை கட்டிய தேசியப் பறவையே
தொட்டு தடவிப்பார்க்க ஆசை மனதிலே
கிட்டவா கெஞ்சிக் கேட்கிறேன்
முத்தம் தர கொஞ்சி அழைக்கிறேன் !
பல்லவ மன்னன் மாமல்லன்
படைகளை நிறுத்திய மாமல்லை..
கிடைத்த ஓய்வு காலங்களில்
குடைந்தான் அழகுடன் பாறைகளை !
முக்குளிக்கும் முட்டுக்காடு
முந்திச்செல்லும் போட்டுகள் நூறு
முச்சந்தி முட்டும்போது
அச்சம் நெஞ்சில் அட்சதை தூவூம் !
எழில் கொஞ்சும் ஈஞ்சம்பாக்கம்
கோல்டன் பீச்சில் தஞ்சமாவோம்
வாயிலிலே வரவேற்கும் வாய்ப்பேசா காவலன்
அவன்தான் விஜிபி யின் வளர்ப்பு கதாநாயகன் !
நாங்க வந்த ஜோலி முடிஞ்சிப் போச்சி
உங்க கூலி எம்புட்டு ஆச்சி…?
மீட்டர் போட்டிருந்தா தொல்லை இல்லையே
மெட்ராஸில் உங்க மெயின்ட்டனன்ஸே சரியில்லையே !