என்னவளின் புன்னகை

மௌனமான
புன்னகையில்
மனதை பறிக்கிறாய்,
மறுபடியும் பார்க்க
வைக்கிறாய்....

ஓர்விழி பார்வையில்
ஓராயிரம் கதை
உவகை காட்டுகிறது,
உரிமை பேசுகிறது. ...

வாய் சிரித்து
நீ பேசினால்
ஏஞ்சலும் ஏனோ
இரவல் வாங்கி
இடமாறி விடும். ...

உன் நடைதான்
உலகின் கடைசி
அஐந்தா....
நீ நடப்பதை பார்த்து
நானிப்போகிறது
என் பேனா....

நீ நீதான்....
என் அன்பு
குயில் தான்....

-- வினோ. வி

எழுதியவர் : vibgyor (18-Jul-16, 10:34 pm)
பார்வை : 538

மேலே