மானுட பயணம்

பிறப்பிற்கும் இறப்பிற்கும் இடைபட்ட காலத்தை
எத்தனை பேர் சரியாக பயன்படுத்தி இருக்கிறார்கள்?
வாழ்க்கை என்பது அந்த இடைபட்ட காலம்தான்
என்பதை உணர்ந்தவர்கள் எத்தனை பேர்!
மத நெறி கொண்ட மனிதன்
இன்று ஏனோ இங்கு இல்லை!
மதவெறி பிடித்த மிருகங்களால்தான்
எத்தனை தொல்லை ...?!
முயற்சி மேல் முயற்சி செய்தால்
முடியாதது எதுவும் இல்லை!
எந்நாளும் ஆசை குறையாதிருந்தால்
துன்பம்தான் தொடரும் சாகும்வரை!
மனிதனிடம் மனிதன்
பாகுபாடு பாராதிருந்தால்
ஏற்பட்டிருக்குமா அணு ஆயுதம் ?
மனிதனே மனிதன் அடித்து தின்றால்
எப்படி மலரும் சமத்துவம்?
அன்புக்கு ஈடாய் ...
அணு ஆயுதம் உண்டா?
அணு ஆயுதம் செய்யும் அறிவை கொண்டு
சக உயிர்களிடத்தில் அன்பை செலுத்து
அதுதான் மானுடத்திற்கு இனிமை ...!
பேதத்தை வளர்ப்பதா புதுமை?
பகுத்தறியும் தன்மை கொண்ட மனிதா!
அதை பயன்படுத்தாமல் இருப்பது நல்லதா?
உயிர் என்பது ஒன்றடா! அதில் உயர்வு தாழ்வு ஏதடா?
வெங்காயத்தை உரித்தால் மிஞ்சுவது என்னடா?
புத்தியை கொஞ்சம் பயன்படுத்திப் பாருடா!
மானுடம் என்பது நாம் எல்லோரும் தானடா!
அதில் சாதி மதம் என்பதெல்லாம் இடையில் வந்ததடா
அதற்காக நானும் நீயும் சண்டையிடுவது வீணடா...வீணடா!