தொற்றுநோய்

காலம் காலமாய்
சாதியும், மதமும்
மனிதன் பின்னால்
தொடர்ந்து வருவதேன்?

ஓ!
இதுவொரு
தொற்றுவியாதியோ?

இதைத் தடுக்க
இதுவரை ஏதும்
மருந்து இல்லையோ?

உண்டெனில்...
இனியும் ஏன்?
மனிதனுக்குள்!

ஓ!
அரசியல்வாதிகள்
இருக்கும்வரை
இது அழியாது போலும்...!

எழுதியவர் : கிச்சாபாரதி (7-May-20, 12:43 pm)
சேர்த்தது : கிச்சாபாரதி
பார்வை : 58

மேலே