செந்தமிழ் மொழியாள்

செந்தமிழ் மொழியாள் ..
------------------

செந்தமிழ் மொழியாள் செழுமையின் வழியாள் /
எந்தனின் உயிரினில் இனிதே கலந்தாள் /

எங்கோ பிறந்தாள் இதயம் புகுந்தாள் /
தங்கம் வைரமாய் தாரணி சிறந்தாள் /

விழிகள் நான்கிலும் விளங்கிடும் ஒன்றே /
பழிகள் இல்லா பாவையின் அன்பிலே /

நல்லறம் காணவே நாமும் இணைந்தோம் /
இல்லறம் என்பதே இனியவள் உறவே /

பற்றியக் கரங்களை விடுவதும் இல்லை/
முற்றிய அன்பு முறிவதும் இல்லையே /

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான் . (23-Aug-22, 8:34 pm)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 153

மேலே