நெஞ்சத்தில் உறைந்தவள்
நெஞ்சத்தில் உறைந்தவள்..!!
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
நெஞ்சத்தில் உறைந்தவள் மஞ்சத்தில்
நிறைந்தவள் /
அஞ்சுகம் எந்தனின் ஆசையில்
வளர்ந்தாளே/
விழிகளில் சிக்கினாள் விந்தையாய் மாறினாள் /
மொழியிலாக் கவிதையாய் மௌனத்தில்
பேசினாளே/
யாரோவாய் வந்தவள் யானாகிப்
போனாளே /
ஊரோடும் உறவோடும் ஒன்றாகிக்
கலந்தாளே/
நான்கு விழிகளின் ஒற்றைப் பார்வையில் /
ஏங்கும் இதயத்தில் இசையாய்த் துடிப்பாளே/
காலம் நீண்டிடும் நாட்கள்
வரையிலும் /
கோல மயிலென் கூட
வருவாளே!!
-யாதுமறியான்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
