உயிர் மறுகும் ஓசை

உறியாட்டம் யேன்தேகம்
அசராமல் ஆட்டம்போடுது
ஊருக்குள்ள போய்சொல்ல
எவறுமில்லத் தேடுது...

பொழுதுபுலர நேரமிருக்கு
காத்திருப்பு தொடருது
ஆத்தங்கரை மரமெல்லாம்
களியாட்டம் போடுது...

நான்மட்டும் இயக்கமிழந்து
நாதியத்து தொங்குறேன்
அவன்னெனைத் தொட்டுத்தூக்க
மனமறுகி ஏங்குறேன்...

செத்தபிறகாவது பாவிமக
ஆசை நிறைவேறுமா
காத்திருந்து தான்
காணணும் ஒருவோரமா...

கீழ்வானம் சிவந்தாச்சு
ஏற்பிடிச்சு நடக்கத்தொடங்கும்
பித்துபிடித்த இந்தப்பாவிமனசும்
அவனுக்காக துடிக்கத்தொடங்கும்...

தேகம்விட்டு பிரிஞ்சபின்பும்
ஆசைவிட்டு போகலையே
ஆத்தாடி யென்மனசை
குளிர்விக்க நீவரலையே...

பாவிமகன் கண்ணாரக்
கண்டும் அசுங்களையே
ஆனாலும் யென்வுசுரு
அவனவிட்டு விலகளையே...

இன்னுமொரு ஜென்மம்
தயங்காமல் தந்துவிடு
அதிலாவது யென்னை
அவனகத்தில் தங்கவிடு...

எழுதியவர் : கவிபாரதீ (23-Aug-22, 7:31 pm)
சேர்த்தது : கவிபாரதீ
பார்வை : 367

மேலே