காதல் படகு

ஒரு மனிதனுக்கு
காதல் தோன்றி விட்டால்
அவனது மனம்
கடல் போல் மாறிவிடும்...!!

நித்தம் நித்தம் காதலை
சிந்திக்கும் மனம்
துடுப்புக்கள் இல்லா
படகைப்போல்
அங்குமிங்கும்
அலை மோதும்
நிலைத்து நிற்க
முடியாமல்
தள்ளாடும்...!!

நிலைத்து நிற்க
துரும்பு ஒன்று கிடைத்துவிட்டால்
மேடை அமைத்து நாட்டியமாடும்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (24-Aug-22, 6:02 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : kaadhal padaku
பார்வை : 253

மேலே