பூவை விற்கும் விதவை
பூவை விற்கும் பூவைக்கு
ஒரு பூவின் மணம்
தெரியாமல் இருக்குமா?
நன்கு தெரிந்திருந்தும்.....
இளம் பாவை
ஒரு பூவை
தலையில் சூட
வழியில்லை!
காரணம்
அந்தப் பாவை
பூவை விற்கும் விதவை!
அவளது வாழ்க்கை
எவ்வளவு பெரிய கொடுமை?!