அவள் முகம்
வசந்த கால முதல் மழையைப் பார்த்த ஆனந்தம்
மார்கழி மாதத்தில் இளங் காலையில்
பனிமுத்துபோர்வையில் காட்சி தரும்
மல்லிக்கொடியைக் கண்ட இன்பம்
கதிரவன் கிரந்த தீண்டலில் மகிழ்ந்து
அலர்ந்த தடாகத்து செந்தாமரைப்பூக்களை கண்ட
மனதின் பூரிப்பு ........ இவை அத்தனையும்
ஒருங்கே காண்கின்றேன் இதோ எனக்காக
கால்கடுக்க காத்திருந்து என்னைக் கண்டதும்
குவிந்திருந்த செவ்வாயின் இதழ்களை சற்றே
விரித்து சிரிக்கும் அந்த பவளக்கொடியாள் முகத்தில்