ச சதீஸ்குமார் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : ச சதீஸ்குமார் |
இடம் | : கோவை |
பிறந்த தேதி | : 08-Jul-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 14-Jul-2016 |
பார்த்தவர்கள் | : 143 |
புள்ளி | : 42 |
நான் ஒரு கட்டுமான வடிவமைப்பு நிறுவனத்தில் கட்டுமான வடிவமைப்பு பொறியாளராக பணிபுரிந்து வருகிறேன்.. எனக்கு தமிழில் எல்லை கடந்த ஆர்வம்.. மொழி உச்சரிப்பில் மிகுந்த கவனம்.. கவலை என் உடன்பிறப்பு இருந்தாலும் என் அன்னை எனக்கு உயிர்த்துடிப்பு.. கவிதை என் எண்ணத்தின் பிரதிபலிப்பு..
கனவு என் பிறவியின் எதிர்பார்ப்பு..
அன்னை அன்பின்
இன்னொரு இறையுரு இவள்...
அகிலம் தழைக்க வலிகள் மறந்து கருவை சுமப்பவள் இவள்...
உறவால் கலந்து உற்ற பெற்றோர் பிரிந்து இன்னோர் இல்லம் செல்பவள் இவள்...
சுற்றம் சூழ சுமையென வாழும் வாழ்வில் உள்ளம் நாடி இல்லம் தேடி சுவையென வந்து மகிழ்வூட்டுபவள் இவள்...
தெவிட்டா தேனன்பும் திகட்டா தித்திப்பும் நாள்தோறும் தரமறவா தேவதை இவள்...
பரிணாமம் படைத்த பல்லுயிர் உலகில் பல்பரிமாணம் படைத்தவள் இவள்... (பெண்ணாக,அன்னையாக,மகளாக,தங்கையாக,மனைவியாக,தோழியாக,பாட்டியாக என பலவகை பரிமாணம்)
இம்மி இடரும் இடும்பைப் பிணியும்
இன்னல் இருளும் இனிதொரு இகழ்வும் இவள் வரவால் விலகும்...
இனிக்கும் இரவும்

நின் அன்பெனும் ஆழியில்
ஆணெனும் அகந்தையும் அழியுதடி...
நின் புன்னகைப் புரவியில்
என் மனப்பறவைகள் சிறகடித்து பறக்குதடி...
நின் போர்த்தொடுக்கும் பார்வைக் கணைகள்
இடிதாங்கும் இதயக்கோட்டையைத் தகர்க்குதடி...
நின் நித்திய நினைவினில் சிக்கிய
சித்தமும் மொத்தமாய் சுழலுதடி...
நின் சிவந்த இதழ்தனில் சிதைந்த
சிந்தையும் விந்தையாய் வீணை மீட்டுதடி...
இன்னும் என்னை முழுதும் ஆட்கொண்ட
பின்னும் மரகத மௌனம் ஏனடி...
நின் பவளவாய் திறந்து நிசத்ப நிலை களைந்து
செந்தமிழ் சிறிதுதிர்த்து தேன்சொல்லொன்று கூறடி...
ஆறாய் ஓடிய ஆறா வலிகளும்
அழிந்து ஆத்ம மோட்சம் அடைவே

கலாபத் தூரிகை விரல்கள் வருடியதால்
கரும் ரோம மலர்கள் மலர்ந்தன
என் பாறை மேனியின் மேல் - புல்லரிப்பு...
காந்தக் கருவிழிகள் கண்ணிமைத்ததால்
புவிகாந்தப்புலமாறி இரவும் பகலும்
கணப்பொழுதில் தோன்றி மறைந்தன - ஆச்சரியம்...
கற்பகக் கமலம் இவள் பூவிதழ் புன்னகை புரிந்ததால்
கற்பனை கடலும் என் கவலை அலைகளும்
வற்றியே தீர்ந்தன - அபூர்வம்...
உன் விழிப்போரும், மொழிப்போரும்
பயன்படவில்லை என்றா
மௌனப்போர் புரிகின்றாய்..!!
உன் பிரிவு என்னை பாதிக்கிறது..!!
நேற்றுவரை சரியாத என் மனதை
இன்று உன் மௌனம் சாதிக்கிறது..!!
111.இரவோடு போராடி கற்ற உண்மைகள்
பகலின் வெளிச்சத்தில் மங்கலாய் தெரிகிறது
112.பாலைவனத்தில் நடப்பட்ட மரக் கன்றுகள்
சோலை பதிவேட்டில் கையொப்பம் இடுகிறது
113.மெழுகுவர்த்தியின் மெலிதான ஒளிக்கீற்றில்
மின்மினிப் பூச்சிகள் நிரந்தர ஓய்வெடுக்கின்றன
114.மழலைகள் தத்தெடுத்துச் செல்லும் வாசலில்
கைக்குழந்தை விண்ணப்பமாய் காமத்தின் முத்திரைகள்
115.கவிஞனின் கனவுகள் மார்கழி வெண்ணிலவாய்
அவனுக்குள் ஒளிர்ந்து எழுத்துக்குள் மறைந்து போகிறது
116.நொண்டிக் கால் குதிரை செய்யும் ஏழை
நொந்து போன மனதை பொம்மையோடு விளையாடி
தூங்காத வறுமையிடம் ஆனந்தமாய் பேசுகிறான்
117.பூக்கள் இல்லாத தேசத்தில்
பிறப்போடு பரிசாய் கிடைத்த
முதல் நட்பு அவள்..
தொப்புள் பிணைப்போடு பிறந்து வந்த பிஞ்சு உறவு அவள்..
குதூகல குறும்புகளின் குட்டி குற்றாலம் அவள்..
மங்காத மழலைப் புன்னகை தேசத்து மணிமகுடம் சூடா இளவரசி அவள்..
உயிர்களிடத்து உன்னத நேசம் வளர்க்கும் அன்பின் ஆலயம் அவள்..
கருவிழியிரண்டை கருவறையாக்கி கருணை கருவைச் சுமக்கும் தாய்மையின் தாயகம் அவள்..
கோடி மலர்களை ஜோடி சேர்த்து
வாடி நின்ற என் மனதைத் தேற்ற புன்னகைத் தேன் சிந்தும் பொன்னுடல் பொக்கிஷம் அவள்..
புரியா தவத்தின்
கேட்கா வரம் அவள்..
அழியா அன்பின்
அட்சயப்பாத்திரம் அவள்..
அணையா விளக்கின்
சுடரும் ஒளி அவள்..
அற்ப

உவமையாய் உன் கவியில் நீ உரைத்த
அந்த நிலவே நிலமிறங்கி
உன் கரம் தொட்டு
முத்தமிட ஆசை கொள்ளும்
நின் கவி காணும் சந்தர்ப்பம் வாய்க்குமானால்..
சிறகாய் பறந்த மனம்
சருகாய் சரிந்த பின்னும்
மெழுகாய் உருகியதடி...!!
உன் நினைவாய் நெஞ்சில்
சேமித்த நாட்களும் வெறும்
கனவாய் காணாமல் போனதடி...!!
கூராய் உன் வேல்விழியும்
விறகாய் எனை வெட்டி
வீழ்த்தியதடி...!!
உனை சுகமாய் சுமக்கும்
இதயமும் பிரிவின் பாரம்
தாளாமல் தேம்பி நின்றதடி...!!
உயிரோடு உருண்டோடிய உதிரமும் உன் உறவை இழந்ததால் வேலைநிறுத்தம் கொண்டதடி...!!
குறிஞ்சிப்பூவாய் மலர்ந்த அன்பும் தனிமை வனத்தில் நெருஞ்சிமுள்ளாய் உயிரை
உறிஞ்சி குடிப்பதேனடி...!!
கிண்ணம் குழிந்த பல வண்ணம் குழைந்த கன்னக்குமிழ் சிவந்த சின்ன அன்னம் இவள் பெண்மையோ - உதிரம் விடுத்து உயிரை பருகுவதல