என் வாழ்வின் வசந்தமே

நின் அன்பெனும் ஆழியில்
ஆணெனும் அகந்தையும் அழியுதடி...

நின் புன்னகைப் புரவியில்
என் மனப்பறவைகள் சிறகடித்து பறக்குதடி...

நின் போர்த்தொடுக்கும் பார்வைக் கணைகள்
இடிதாங்கும் இதயக்கோட்டையைத் தகர்க்குதடி...

நின் நித்திய நினைவினில் சிக்கிய
சித்தமும் மொத்தமாய் சுழலுதடி...

நின் சிவந்த இதழ்தனில் சிதைந்த
சிந்தையும் விந்தையாய் வீணை மீட்டுதடி...

இன்னும் என்னை முழுதும் ஆட்கொண்ட
பின்னும் மரகத மௌனம் ஏனடி...

நின் பவளவாய் திறந்து நிசத்ப நிலை களைந்து
செந்தமிழ் சிறிதுதிர்த்து தேன்சொல்லொன்று கூறடி...

ஆறாய் ஓடிய ஆறா வலிகளும்
அழிந்து ஆத்ம மோட்சம் அடைவேனடி...

எழுதியவர் : ச.சதீஷ்குமார் (2-Oct-17, 11:48 am)
பார்வை : 97

மேலே